தேர்வுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்றன. சுமார் 9300 பேர் தேர்வு எழுதிய தேர்வு முடிவுகள் கடந்த மாத இறுதியில் வெளியாயின. அதனைத் தொடர்ந்து, இந்தத் தேர்வு முடிவுகள்தான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தன.
அதாவது, ராமநாதபுரம் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர் இதில் முதல் 100 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் எப்படி இவ்வாறு முன்னணி இடங்களைப் பெற முடியும் என கேள்வி எழுந்தது... இந்நிலையில் குரூப் 2ஏ தேர்வுகளின் முடிவுகளும் வெளியாயின. இதிலும் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இரு மையங்களில் தேர்வெழுதியவர்கள் முதல் 50 இடங்களுக்குள் தேர்வாகியிருந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. விளக்கமளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் இன்று மதியம் வரை எந்த விளக்கமும் வராத நிலையில் தற்போது விளக்கமளித்துள்ளது டி.என்.பி.எஸ்.சி.