தெற்குக் கடற்கரையில் லேசான நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலைப் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.
தொடர் பூகம்பத்தால் மிரண்டுபோயிருக்கும் பியூர்ட்டோ ரிகோ தீவில் திங்கட்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடலில் உள்ள அமெரிக்கப் பிராந்தியமான பியூர்டோ ரிகோவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 புள்ளிகள் வரை காணப்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
தீவின் தென்பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி அபாயம் ஏதும் இல்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கட்டிடங்களும் சேதம் அடையவில்லை என முதல் கட்டத் தகவலில் தெரிகிறது.